பிரபல நடிகை வீட்டில் போதைப்பொருள்? அதிகாரிகள் சோதனையால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Monday,August 30 2021]

பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும், பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர் என்பதும் தெரிந்ததே. 

இந்த நிலையில் பிரபல கன்னட நடிகை ஒருவர் வீட்டில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சில நிமிடங்களுக்கு முன் கன்னட நடிகை சோனியா அகர்வால் உள்பட 3 பேர் வீடுகளில் போதைபொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும், இந்த சோதனையின் முடிவில் போதைப் பொருள் ஏதாவது சிக்கியதா? என்பது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.