கமல் வீட்டிற்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு ஏன்?

  • IndiaGlitz, [Friday,January 05 2018]

உலக நாயகன் கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டிற்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டை இந்து பாதுகாப்பு கட்சியினர் முற்றுகையிட போவதாக போலீஸாருக்கு வந்த தகவலை அடுத்து அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பலமுறை கமல்ஹாசனின் வீட்டை  இந்து பாதுகாப்பு கட்சியினர் முற்றுகையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் தற்போது மலேசியாவில் நாளை நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்ள சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.