சென்னை மெரீனாவில் திடீர் கூடுதல் பாதுகாப்பு ஏன்?

  • IndiaGlitz, [Friday,September 01 2017]

நீட் தேர்வு விவகாரத்தால் உயிரிழ்ந்த மாணவி அனிதாவின் மரணம் ஒவ்வொரு தமிழனையும் கொதிப்படைய செய்துள்ளது. மருத்துவர் என்ற கனவுகளுடன் வாழ்ந்த அந்த மாணவி செய்த தவறென்ன? இனிமேலும் இந்த கையாலாகாத அரசின் மீது கோபப்படாமல் இருந்தால் நாம் உணர்ச்சியற்றவர்களாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த நிலையில் அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டு ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், சாலை மறியல் ஆகியவைகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சென்னை மெரீனாவில் திடீரென காவல்துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அனிதாவின் மரணம் காரணமாக ஜல்லிக்கட்டு போராட்டம் போல் இன்னொரு போராட்டம் மெரீனாவில் ஆரம்பித்துவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை பாதுகாப்பு மெரீனாவில் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

More News

அனிதா தற்கொலை: தலைவர்கள் இரங்கல்

12ஆம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்து கட் ஆப் 196.7 இருந்தும் அரியலூர் அனிதாவுக்கு மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை என்பதை விட வேறு என்ன துரதிஷ்டம் இருக்க போகிறது...

அனிதா மரணம்: அறிவுரைகளுக்கான நேரமா இது?

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடித் தோற்ற மாணவி அனிதாவின் மரணம் தமிழக மக்களை அதிர்ச்சியிலும் கடும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மத்திய அரசை எதிர்க்கும் வலிமையான தலைவர் வேண்டும்: அரவிந்தசாமி

நீட் தேர்வு காரணமாக மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட துரதிஷ்டமான சம்பவம் காரணமாக தமிழகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது...

நாம் ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டோம். அனிதா மறைவு குறித்து கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

அனிதாவுக்கு நிகழ்ந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது: ரஜினிகாந்த்

நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்காத மன உளைச்சலில் அரியலூரை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.