சென்னை மெரீனாவில் திடீர் கூடுதல் பாதுகாப்பு ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
நீட் தேர்வு விவகாரத்தால் உயிரிழ்ந்த மாணவி அனிதாவின் மரணம் ஒவ்வொரு தமிழனையும் கொதிப்படைய செய்துள்ளது. மருத்துவர் என்ற கனவுகளுடன் வாழ்ந்த அந்த மாணவி செய்த தவறென்ன? இனிமேலும் இந்த கையாலாகாத அரசின் மீது கோபப்படாமல் இருந்தால் நாம் உணர்ச்சியற்றவர்களாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த நிலையில் அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டு ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், சாலை மறியல் ஆகியவைகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சென்னை மெரீனாவில் திடீரென காவல்துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அனிதாவின் மரணம் காரணமாக ஜல்லிக்கட்டு போராட்டம் போல் இன்னொரு போராட்டம் மெரீனாவில் ஆரம்பித்துவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை பாதுகாப்பு மெரீனாவில் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com