சவால் விட்ட மதனுக்கு சவுக்கடி தந்த போலீஸ்...! கூட்டுக் களவாணிகள் கைதாகிறார்களா...?

  • IndiaGlitz, [Friday,June 18 2021]

ஆபாச மதன் கைது செய்யப்பட்ட நிலையில், அவனது தோழர்களையும் கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யுடியூபில் பப்ஜி விளையாட்டிற்காக ஆபாச வீடியோக்களை பதிவிட்ட மதன் மீது, ஆன்லைனில் 159 புகார்கள் வந்து குவிந்திருந்தன. இதைத்தொடர்ந்து மதனை கைது செய்ய சேலம் விரைந்த காவல் துறையினர், அங்கிருந்த அவரின் அப்பா மாணிக்கத்தை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மதன் தலைமறைவான நிலையில், அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுமட்டுமில்லாமல் மதன் யுடியூபில் பெண்களிடம் ஆபாசமாக பேசுவதுடன், அத்துமீறியும் நடந்துள்ளான். சிறுவர்,சிறுமிகளிடம் ஆபாச படத்தை விற்றுள்ளான். இதற்காக நண்பர்களுடன் தனி குழுவை அமைத்து, டெலிகிராம் என்ற அப்ளிகேஷன் மூலம், இந்த மோசடி வேலைகளை செய்து வந்துள்ளார்கள். இதனால் கிருத்திகாவிற்கு உடந்தையாக இருந்த தோழிகளும், மதனுடன் சேர்ந்து இந்த கேவலமான வேலைகளை செய்து வந்த அவன் நண்பர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன் அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியில் ஹீரோ என்ற அசைவ ஆடம்பர ஹோட்டல் ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளான். இதற்காக ஹோட்டலை ஆதாரமாக காட்டி, 5 லட்சம் வங்கியில் கடன்வாங்கி, மோசடி செய்துள்ளான். அதேபோல் ஹோட்டல் உரிமையாளருக்கும் பல மாதங்களாக வாடகை தராமல் தப்பி ஓடிய விஷயம், கிருதிக்காவை விசாரித்ததில் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து உரிமையாளர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் மதன் மீது புகார் கொடுத்தார்.

யுடியூப் மூலமாக மாதம் 10 லட்சம் வரை இந்த மோசடி தம்பதி சம்பாரித்து, ஆடி கார் உள்ளிட்ட 3 உயர்ரக கார்கள், சென்னையில் 2 சொகுசு வீடுகள் வாங்கியுள்ளனர். இவர்களின் வங்கிக்கணக்கில் 4 கோடிக்கு அதிகமாக பணம் இருந்ததால், அதையும் காவல் துறையினர் முடக்கியுள்ளனர். கிரிப்டோ கரன்சி மூலமாகவும் மதன் பல தில்லாலங்கடி வேலைகள் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மோசடிகள் மூலம் பலரும் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.