50 குழந்தைகளைத் தத்தெடுத்த பெண் காவலர்… சேவைக்கு குவியும் பாராட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் அடிப்படை வசதியே இல்லாத 50 குழந்தைகளைத் தத்தெடுத்து உள்ளார். மேலும் அவர்களது கல்விச் செலவையும் இவரே ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால் அந்த பெண் காவலரை மும்பை காவல் துறை பாராட்டி சான்றிதழ் அளித்துள்ளது.
கொரோனா நேரத்தில் நடுத்தர குடும்பங்கள் கூட பொருளாதார வசதியின்றி தவித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில் மும்பையின் ராய்காட் மாவட்டத்தின் வாஜே பகுதியில் உள்ள யானி வித்யாலயா பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலரும் பொருளாதார வசதியின்றி, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் தவித்து வருவதை பெண் காவலர் ரெஹானா ஷேக் அறிந்தார். இதனால் அந்தப் பள்ளியில் அடிப்படை வசதியே இல்லாமல் தவித்து வந்த 50 குழந்தைகளை ரெஹானா தத்து எடுத்துள்ளார்.
இந்த குழந்தைகள் அனைவரும் 10 ஆம் வகுப்பு படித்து முடிக்கும் வரை அவர்களது படிப்பு செலவு முழுவதையும் இவரே ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் மாணவர்களுக்குத் தேவையான மற்ற வசதிகளையும் ரெஹானா செய்து கொடுத்து வருகிறார். இப்படி 50 குழந்தைகளைத் தத்து எடுத்தது மட்டும் இன்றி கொரோனா நேரத்தில் ரத்தம் தேவைப்படுவோருக்கு அவற்றை ஏற்பாடு செய்து கொடுப்பது, பிளாஸ்மா சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது போன்ற பல்வேறு சமூக பணிகளையும் ரெஹானா செய்து வருகிறார்.
இதனால் அனைத்துக் காவலர்களுக்கும் ரெஹானா ஒரு சிறந்த எடுத்துக் காட்டாய் திகழ்வதாக மும்பை காவல் துறை இவருக்கு நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டு தெரிவித்து இருக்கிறது.
- Police pat for super cop Rehana Shaikh who adopted 50 kids, got patients beds, O2
— Mateen Hafeez (@Mateen_Hafeez) June 10, 2021
- She won two gold medals & a silver medal in Sri Lanka in 2017 while representing Mumbai police
- Police Commissioner Hemant Nagrale appreciates her work
https://t.co/Z3Jlliz13p pic.twitter.com/e57idl0SKz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout