50 குழந்தைகளைத் தத்தெடுத்த பெண் காவலர்… சேவைக்கு குவியும் பாராட்டு!

  • IndiaGlitz, [Tuesday,June 15 2021]

மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் அடிப்படை வசதியே இல்லாத 50 குழந்தைகளைத் தத்தெடுத்து உள்ளார். மேலும் அவர்களது கல்விச் செலவையும் இவரே ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால் அந்த பெண் காவலரை மும்பை காவல் துறை பாராட்டி சான்றிதழ் அளித்துள்ளது.

கொரோனா நேரத்தில் நடுத்தர குடும்பங்கள் கூட பொருளாதார வசதியின்றி தவித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில் மும்பையின் ராய்காட் மாவட்டத்தின் வாஜே பகுதியில் உள்ள யானி வித்யாலயா பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலரும் பொருளாதார வசதியின்றி, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் தவித்து வருவதை பெண் காவலர் ரெஹானா ஷேக் அறிந்தார். இதனால் அந்தப் பள்ளியில் அடிப்படை வசதியே இல்லாமல் தவித்து வந்த 50 குழந்தைகளை ரெஹானா தத்து எடுத்துள்ளார்.

இந்த குழந்தைகள் அனைவரும் 10 ஆம் வகுப்பு படித்து முடிக்கும் வரை அவர்களது படிப்பு செலவு முழுவதையும் இவரே ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் மாணவர்களுக்குத் தேவையான மற்ற வசதிகளையும் ரெஹானா செய்து கொடுத்து வருகிறார். இப்படி 50 குழந்தைகளைத் தத்து எடுத்தது மட்டும் இன்றி கொரோனா நேரத்தில் ரத்தம் தேவைப்படுவோருக்கு அவற்றை ஏற்பாடு செய்து கொடுப்பது, பிளாஸ்மா சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது போன்ற பல்வேறு சமூக பணிகளையும் ரெஹானா செய்து வருகிறார்.

இதனால் அனைத்துக் காவலர்களுக்கும் ரெஹானா ஒரு சிறந்த எடுத்துக் காட்டாய் திகழ்வதாக மும்பை காவல் துறை இவருக்கு நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டு தெரிவித்து இருக்கிறது.

More News

6 வயது சிறுமி பேட்டிங்கில் வெழுத்து வாங்கும் காட்சி… சோஷியல் மீடியாவில் வைரல்!

6 வயது சிறுமி ஒருவர் பேட்ஸ்மேனுக்கான உடையோடு கிரிக்கெட் பேட்டை பிடித்து அபராமாக பேட்டிங் செய்கிறார்.

39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட உலகின் பெரிய குடும்பத் தலைவன் மறைந்த சோகம்!

உலகிலேயே மிகப்பெரிய குடும்பத்துக்குத் தலைவராக அறியப்பட்ட  ஜியோனா சனா நேற்று உடல் நலக்கோளாறு காரணமாக உயிரிழந்தார்.

கிளப் ஹவுஸ்-இல் வாய்ச்சவடால்....! செங்கல்பட்டில் கம்பி என்னும் கிஷோர் கே சுவாமி....!

தமிழக முன்னாள் அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய கிஷோர் கே சுவாமி,

ஜோகோவிச்சிடம் பரிசுப் பெற்ற சிறுவன்… உணர்ச்சிப் பொங்கும் வைரல் வீடியோ!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று முடிந்தது. நேற்று நடைபெற்ற இதன் இறுதிப் போட்டியில் செர்பியா

சிறுமிகள் முதல் அரசாங்கம் வரை அடாவடி...! ஆபாச அர்ச்சனை செய்யும் மதன் யுடியூபர் ....!

பெண்கள், குழந்தைகள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் என பப்ஜி மதனுக்கு, ரசிகர்கள் ஏராளம் உள்ளனர்.