அதிபர் ட்ரம்பை வாயை மூடிக்கொண்டு இருக்கச் சொன்ன காவல் துறை அதிகாரி!!! தொடரும் பரபரப்பு நிகழ்வுகள்!!!
- IndiaGlitz, [Wednesday,June 03 2020]
கடந்த மே 25 ஆம் தேதி முதல் பல்வேறு அமெரிக்கா மாகணங்களில் கறுப்பினத்தவர்கள் தங்கள் மேல் காட்டப்படும் காழ்ப்புணர்ச்சி காரணமாக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டத்தை கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் தவறிவிட்டார் என்று தற்போது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் காவல் துறை மூத்த அதிகாரி ஆர்ட் அசெவெடோ அமெரிக்கா அதிபருக்கு ஒரு அறிவுறுத்தலை கூறியிருக்கிறார். அவரது பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காவல் துறை அதிகாரி ஆர்ட் அசெவெடோ தான் அனைத்துக் காவல் துறை அதிகாரிகளின் சார்பாக பேசுகிறேன் எனத் தெரிவித்து விட்டு “அமெரிக்க அதிபர் சொல்வதற்கு ஆக்கப்பூர்வமான விஷயம் எதுவும் இல்லை என்றால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கவும்” என்று பேசியிருக்கிறார். முன்னதாக அதிபர் ட்ரம்ப் இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக் காரார்களை நோக்கி உள்நாட்டு பயங்கர வாதிகள் என்றும், வன்முறை, போராட்டங்களில் ஈடுபட்டால் இராணுவம் வரவழைக்கப்படும் என்றும் கூறியிருந்தார். மேலும், அமெரிக்கா சொத்தை யாராவது கொள்ளையடித்தால் துப்பாக்கி சூடு நடத்தப்படும் என்றும் பேசியிருந்தார். இந்த அறிவிப்புகளுக்குப் பின்னர்தான் போராட்டங்கள் வன்முறைகளாவும் மாறியது. பல இடங்களில் காவல் துறையினரை எதிர்த்தும் போராட்டக் குழுக்கள் சில செயல்களில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
தற்போது டெக்சாஸில் நடைபெற்ற ஒரு சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெக்சாஸில் போராட்டக் குழுவில் இருந்த ஒரு இளைஞன் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து போராட்டங்களை ஒடுக்குமாறு ஆளுநர்களை வலியுறுத்தி வருகிறார். ஆளுநர்களின் செயல்பாடு மந்தமாக இருப்பதாகவும் விமர்சித்து இருக்கிறார். டெக்சாஸின் காவல் துறை சரியாக செயல்பட வில்லை என்ற விமர்சனத்தையும் வைத்து இருக்கிறார். அதிபர் ட்ரம்ப் ஆளுநர் மற்றும் காவல் துறையை நோக்கி இப்படி வைக்கும் தொடர்க் குற்றச்சாட்டுகளால் அவர்கள் அதிருப்தி அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Houston Police Chief @ArtAcevedo: “Let me just say this to the President of the United States, on behalf of the police chiefs of this country: please, if you don’t have something constructive to say, keep your mouth shut.” pic.twitter.com/z5AJpOO0RO
— Christiane Amanpour (@camanpour) June 1, 2020