இளைராஜாவும் வடிவேலுமே மாமருந்து: போலீஸ் அதிகாரியின் கலகலப்பான டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
போலீஸ் அதிகாரி என்றால் விரைப்பான சட்டையை போட்டு பணிபுரியலாம் ஆனால் எப்போதும் விரைப்பாக இருக்க வேண்டுமா? கடினமான சூழ்நிலைகளை எளிதில் கடக்க இசையும் நகைச்சுவையை உதவும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வடிவேலு குறித்த ஒரு வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் அனைத்து பிராண்டுகளின் விளம்பரங்களுக்கும் வடிவேலுவின் புகைப்படங்கள் பொருத்தமாக இருப்பது சுட்டி காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ குறித்து நெல்லை மாவட்ட துணை கமிஷனர் அர்ஜுன் சரவணன் அவர்கள் ’அட ஆமால்ல’ என்று பதிவு செய்துள்ளார். இதற்கு ஒரு ட்விட்டர் பயனாளி ’ஒரு போலீஸ் அதிகாரி இது மாதிரி போஸ்ட் போடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை’ என்று கூறியிருந்தார்
அவருக்கு பதில் அளிக்கும் வகையில் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த அர்ஜுன் சரவணன் அவர்கள் கூறியதாவது: போலீஸ் அதிகாரி கஞ்சியை சட்டைக்கு போட்டு விரைப்பாக வேலை பாக்கனும். ஆனா ஆளே எப்பவும் விரைப்பாக இருக்கனும்னு எதிர்பார்த்தா எப்படிங்க? கடினமான சூழ்நிலைகளை எளிதில் கடக்க உதவுவதே நல்ல இசையும் நகைச்சுவையுமே! இளையராஜாவும் வடிவேலுமே மாமருந்து என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த டுவிட்டுக்கு கமெண்ட் அளித்த நெட்டிசன்கள் ‘வாழ்க்கையில் எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் இளையராஜாவின் இசையை கேட்டால் அல்லது வடிவேலுவின் நகைச்சுவை படங்களை பார்த்தால் உடனே சரியாகிவிடும்’ என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இது உண்மையும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் அதிகாரி கஞ்சியை சட்டைக்கு போட்டு விரைப்பாக வேலை பாக்கனும். ஆனா ஆளே எப்பவும் விரைப்பாக இருக்கனும்னு எதிர்பார்த்தா எப்படிங்க?
— Arjun Saravanan (@ArjunSaravanan5) July 13, 2020
கடினமான சூழ்நிலைகளை எளிதில் கடக்க உதவுவதே நல்ல இசையும் நகைச்சுவையுமே! இளைராஜாவும் வடிவேலுமே மாமருந்து. #vadiveluforlife #Ilayarajaforsoul https://t.co/ml1OIYXMhG pic.twitter.com/y9LyWXvj8B
அட
— Arjun Saravanan (@ArjunSaravanan5) July 13, 2020
ஆமால்ல..#Vadiveluforlife#Vadiveluforlough https://t.co/CcEXFcAqFn
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com