புதையலுக்காக நடந்த கொலை: போலீஸ் அதிகாரி மகனே கொலை செய்த கொடூரம்

  • IndiaGlitz, [Saturday,November 30 2019]

புதையல் ஆசையால் போலீஸ்காரர் மகன் ஒருவரே கொலை செய்த சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது அனைவரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை அருகே மேஸ்திரி முருகன் என்பவர் சமீபத்தில் டாஸ்மார்க் கடை ஒன்றில் தாராளமாக செலவு செய்துள்ளார். அவர் கையில் அதிகமாக 2000 ரூபாய் நோட்டு இருந்ததும் அந்த நோட்டுகளை அவர் அங்கு வருபவர்களுக்கு மது வாங்கி கொடுப்பதுமாக இருந்துள்ளார்

இதனை அடுத்து அருண்பாண்டியன் என்ற இளைஞர் முருகனை சுற்றி வளைத்து உனக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என்று கேட்டுள்ளனர். அதற்கு முருகன் தான் புதையல் கண்டெடுத்தாகவும், அதில் உள்ள நகைகளை விற்று செலவு செய்வதாகவும் கூறினார்

இதனை அடுத்து ஒரு காரில் முருகனை கடத்திய அருண் பாண்டியனும் அவரது நண்பர்களும் புதையல் இருந்த இடத்தைக் காட்டுமாறு அடித்து உதைத்துள்ளனர். அடி தாங்க முடியாமல் புதையல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாக முருகன் கூற, முருகனையும் அவரது குடும்பத்தினரையும் காரில் அருண்பாண்டியன் குழுவினர் அழைத்துச் சென்றுள்ளார்

ஆனால் முருகன் காட்டிய இடத்தில் புதையல் இல்லை என்பதால் ஆத்திரமடைந்த அருண்பாண்டியன் முருகனை அடித்து உதைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். தங்கள் முன்னிலையிலேயே முருகன் அடித்துக் கொல்லப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுக்க, இந்த புகாரின் அடிப்படையில் அருண் பாண்டியன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்

இதில் அருண்பாண்டியன் என்பவர் காவல்துறை அதிகாரி ஒருவரின் மகன் என்றும் கூறப்படுகிறது. புதையல் ஆசையால் போலீஸ் அதிகாரி ஒருவரின் மகனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது