கழிவுநீரில் விழுந்த மூதாட்டியை தூக்கிச்சுமந்த காவலர்… குவியும் பாராட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
புதுச்சேரியில் கழிவுநீர் வாய்க்காலில் விழுந்த 70 வயது மூதாட்டியை காவலர்கள் இருவர் தூக்கிச்சென்று காப்பாற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுநிலையினால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாக மழைபெய்து வருகிறது. மேலும் மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருக்கிறது. இந்நிலையில் மூலக்குளம் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீர் வாய்க்காலில் சுந்தரி எனும் 70 வயது மூதாட்டி தவறி விழுந்துள்ளார்.
இந்தத் தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் மற்றும் சரவணக்குமார் இருவரும் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மூதாட்டியை கழிவுநீர் வாய்க்காலில் இருந்து மீட்டுள்ளனர்.
மேலும் மூதாட்டியை தங்களது கைகளாலேயே சுமந்த அந்தக் காவலர்கள் மூதாட்டியின் வீட்டிற்கே கொண்டு சென்றதோடு அவருக்கு உடை மற்றும் தேவையான பொருட்களை கொடுத்து உதவியுள்ளனர். இந்தச் சம்பவம் சோஷியல் மீடியாவில் பரவியதை அடுத்து காவலர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com