ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில், காவல் அதிகாரிக்கு சிறைதண்டனை...!
- IndiaGlitz, [Wednesday,April 21 2021]
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை காவல் அதிகாரிகள் கொலை செய்ததை தொடர்ந்து, இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா ஒருபக்கம் உலகையே உலுக்கி வந்தாலும், சில மரணங்கள் மக்களை மனதளவில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்ற. கடந்து ஆண்டு நடந்த ஜார்ஜ் பிளாய்ட்கொலை வழக்கு மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அமெரிக்காவின் காவல் துறைக்கு எதிராக பலரும் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கொலைவழக்கில் காவல்துறை அதிகாரி டெரிக் சாவ்வின் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை அமெரிக்க காவல் அதிகாரிகள் கைது செய்து காரில் ஏற்ற முயற்சித்தனர். அப்போது அவர் ஏற மறுத்ததால், டெரிக் சாவ்வின் என்ற அதிகாரி அவரது காலை பிளாய்டின் கழுத்தில் நீண்ட நேரம் வைத்து அழுத்தினார். இதனால் மூச்சுத்திணறல் காரணமாக 45 வயது நிரம்பிய ஜார்ஜ் உயிரிழந்தார். இவரின் மரணம் அமெரிக்காவையே புரட்டுப்போட்டது என சொல்லலாம்.
இவரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது, பார்ப்போரை கண்கலக்கவும் செய்தது. காவல் அதிகாரியின் இந்த கொடூரத்தை கண்டித்து அமெரிக்காவில் ஏகப்பட்ட போராட்டங்கள் வெடிக்கத்துவங்கின.
இதைத்தொடர்ந்து டெரிக் சாவ்வின் மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டனர். பிளாய்ட்டின் குடும்பத்தினர் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர். மினசோட்டா நீதிமன்றத்தில் இவரின் வழக்கு நடந்து வந்த நிலையில், நேற்று டெரிக் சாவ்வின் குற்றவாளி எனதீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பானது பிளாய்ட்டின் குடும்பத்தினரால் வரவேற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டெரிக் சாவ்வின்-க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும், செய்திகள் கூறுகிறது.