அஜித், விஜய்யை அடுத்து அண்ணாச்சியையும் பாராட்டிய காவல்துறை அதிகாரி!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் விஜய்யை அடுத்து அண்ணாச்சி என்று அன்புடன் அழைக்கப்படும் லெஜண்ட் சரவணன் அவர்களை காவல்துறை அதிகாரி ஒருவர் பாராட்டியுள்ளது வைரலாகி வருகிறது
சரவணா ஸ்டோர் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் அவர்கள் தற்போது ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது குலுமணாலியில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ஸ்டில்கள் சமீபத்தில் வைரலாகி வருகின்றன
இந்த ஸ்டில்களை பார்த்து ஏராளமானோர் லைக் செய்து வந்தாலும் ஒரு சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர். இந்த வயதில் ஹீரோவாக நடிப்பது தேவையா என்ற ரீதியில் ஒரு சில கமெண்ட்ஸ்கள் இருந்தன
இந்த நிலையில் இது குறித்து காவல்துறை அதிகாரி அர்ஜுன் சரவணன் அவர்கள் கூறியதாவது:இன்று காலை முதல் நிறைய பேர் இந்த திரைப்படத்தின் ஸ்டில்களை ஸ்மைலி போட்டு அனுப்பினர். இதில் சிரிக்க ஏதுமில்லை. இந்த வயதிலும் ஹீரோவாக நடிக்கவும், கேலி கிண்டல்களை எதிர்கொள்ளவும் தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும். வாழ்த்துகள் The legend saravana’ என்று பதிவு செய்திருந்தார்.
ஏற்கனவே ’யார் ஒருவர் நம்மை நம்மை இழிவாக பேசுகிறார்களோ அவர்கள் மத்தியில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை விஜய்யிடம் இருந்து தான் கற்றுக் கொண்டதாக பேட்டி ஒன்றில் அர்ஜுன் சரவணன் அவர்கள் கூறியிருந்தார். அதேபோல் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தையும் அவர் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் படங்களுக்கும் அவர் அவ்வப்போது பாராட்டு தெரிவிப்பதும் உண்டு. அந்த வகையில் அஜித், விஜய், சிவகார்த்திகேயன் படங்களை அடுத்து தற்போது அண்ணாச்சிக்கும் அவர் ஆதரவாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இன்று காலை முதல் நிறைய பேர் இந்த திரைப்படத்தின் ஸ்டில்களை ???? ஸ்மைலி போட்டு அனுப்பினர். இதில் சிரிக்க ஏதுமில்லை. இந்த வயதிலும் ஹீரோவாக நடிக்கவும், கேலி கிண்டல்களை எதிர்கொள்ளவும் தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும்.
— Arjun Saravanan (@ArjunSaravanan5) March 18, 2021
வாழ்த்துகள் The legend saravana ??#Thelegend pic.twitter.com/x2HYmGlns5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com