அண்ணா சாலையில் போலீஸ் தடியடி: போர்க்களமானது போராட்டம்

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

சென்னை அண்ணா சாலையில் போலிசாரின் தடுப்புகளை உடைத்துவிட்டு போராட்டக்காரர்கள் வாலஜா சாலையில் நுழைய முயன்றதால் அந்த பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. 

இந்த நிலையில் தடுப்புகளை உடைத்துவிட்டு சேப்பாக்கம் மைதானம் நோக்கி சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அந்த பகுதி முழுவதும் போர்க்களம் போல் காணப்படுகிறது. போலீசாரின் தடியடி காரணமாக போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். 

இந்த நிலையில் இந்த தடியடி சம்பவத்தில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் ஒருவர் பலத்த காயம் அடைந்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை மற்ற தொண்டர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்

இந்த நிலையில் போலீஸ் தடியடிக்கு நீதி கேட்காமல் போக மாட்டோம் என பாரதிராஜா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

More News

அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைத்த சீமான்: பெரும் பரபரப்பு

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நூற்றுக்கணக்கான நாம்தமிழர் கட்சி தொண்டர்கள் சென்னை அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைத்துள்ளதால்

ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம்: திடீரென களத்தில் குதித்த ரஜினி ரசிகர்கள்

காவிரி, ஸ்டெர்லைட் போராட்டங்கள் தமிழகத்தில் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த போராட்டங்களை திசைதிருப்பும்

ஐபிஎல் போட்டி எதிரொலி: கடற்கரை சாலை- வாலாஜா சாலை போக்குவரத்து திடீர் நிறுத்தம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி இன்னும் ஒருசில மணி நேரங்களில் ஆரம்பமாகவுள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

சென்னையில் சிஎஸ்கே போட்டி: கட்டுப்பாட்டிற்கு திடீர் தளர்வு

சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் போட்டிக்கு வரும் பார்வையாளர்களுக்கு நேற்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

காவிரிக்காக ஒன்று சேர்ந்த அஜித்-விஜய் ரசிகர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக போராட்டம் செய்து வருகின்றனர்.