close
Choose your channels

'சூர்யா 44' படப்பிடிப்பு தளத்தில் போலீஸ் விசாரணையா? என்ன காரணம்?

Thursday, August 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு திடீரென போலீசார் விசாரணை செய்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் ஓய்வு எடுத்து வரும் நிலையில் மற்ற நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ரஷ்யாவை சேர்ந்த 115 துணை நடிகர்கள் நடித்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்தவர்கள் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து முறையாக காவல் துறையில் தகவல் தெரிவிக்காதது ஏன் என அவர்கள் தங்கி இருக்கும் நட்சத்திர ஓட்டலில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில் போலீசாரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment