முடியாது என கமல் சொன்னதை, செய்து காட்டிய ஷங்கர் 

  • IndiaGlitz, [Wednesday,March 18 2020]

சமீபத்தில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பின் போது ராட்சத கிரேன் உடைந்து விழுந்த விபத்தில், ஷங்கரின் உதவியாளர் உள்பட 3 பேர் பலியாகினர் என்பது தெரிந்ததே. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று இயக்குனர் ஷங்கர் உள்பட 23 பேர்கள் விபத்து நடந்த இடத்தில் விபத்து எப்படி நடந்தது என்று நடித்து காட்டுமாறு சம்மன் அனுப்பப்பட்டது

இந்த சம்மனை அடுத்து ஷங்கர் உள்ளிட்ட 23 பேர் இன்று ஈவிபி பிலிம் சிட்டியில் கிரேன் விழுந்து உடைந்த போது என்ன நடந்தது என்பதை நடித்து காட்டினர். இதனை காவல்துறையினர் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த வீடியோ காட்சியின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை தொடங்க இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விபத்து எப்படி நடந்தது என்பதை நடித்து காட்டுமாறு தன்னை போலீசார் துன்புறுத்துவதாக கமலஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது அவர் நடித்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

More News

கோழி, முட்டைகளைத் தாராளமாகச் சாப்பிடலாம்; அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சம் நிலவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் கோழி மற்றும் இறைச்சி பொருட்களின் விற்பனை சரிந்து வருவதாகக் கூறப்பட்டது.

ரூ.1 கோடி பரிசு; கோழியால் கொரோனா??? நிரூபித்தால் பரிசை வெல்லலாம்!!!

கொரோனா பயத்தினால் மக்கள் இறைச்சி உணவுகளைத் தவிர்த்து வந்த நிலையில் கோழிகளுக்கும் கொரோனா பரவி வருகிறது

கொரோனா: நில்லுன்னு சொன்னா நிக்குமா??? குட்டி அஸ்வந்த்தின் வைரல் வீடியோ!!!

கொரோனா பாதுகாப்பு குறித்து உலகத் தலைவர்கள் முதற்கொண்டு அனைவரும் விழிப்புணர்வு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அரண்மனை கிளி தொடரில் இருந்து விலகினார் நீலிமாராணி..!

வாழ்க்கை பல மாற்றங்களினை கோருகிறது. ஆச்சரியத்துடன் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். போய் வா துர்கா.. நீங்கள் தான் என் பலம் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்

இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை: பிரபல இயக்குனரின் கொரோனா டுவீட்

கொரோனா வைரசால் உலகமே பரபரப்பில் இருந்து வரும் நிலையில் அதன் ஆபத்தை உணராமல் ஒரு சிலர் கொரோனா வைரஸ் குறித்து மீம்ஸ் கிரியேட் செய்தும், காமெடி டுவிட்டுக்களை பதிவு செய்தும் வருகின்றனர்