சத்யாவை திட்டமிட்டே கொலை செய்தேன்: சதீஷின் அதிர்ச்சி வாக்குமூலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கல்லூரி மாணவி சத்யாவை இரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷ் வாக்குமூலம் கொடுத்த நிலையில் அந்த வாக்குமூலத்தில் தற்செயலாக இந்த கொலை சம்பவம் நடைபெறவில்லை என்றும் திட்டமிட்டே கொலை செய்தேன் என்றும் கூறியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் என்ற பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர் மகன் சதீஷ் அதே பகுதியில் காவலர் குடியிருப்பில் வசித்துவரும் தலைமை காவலர் மகள் சத்யாவை காதலித்துள்ளார். ஆனால் சத்யா, சதீஷை காதலிக்க மறுத்துள்ள நிலையில் இதுகுறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் சத்யாவின் தாயார் தி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வருமாறு சத்யாவை சதீஷ் வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து சதீஷை சந்திக்க சத்யா சென்ற போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சத்யாவை தண்டவாளத்தில் சதீஷ் தள்ளிவிட்டார். இதனால் சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அடுத்து சதீஷ் அங்கிருந்து தப்பி தலைவரானார். சதீஷ் பிடிப்பதற்காக 7 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் மூலம் அவர் துரைப்பாக்கம் பகுதியில் இருப்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் நேற்று சதீஷை போலீசார் விடிய விடிய விசாரணை செய்ததில் இந்த கொலையை தான் ஆத்திரத்தில் செய்யவில்லை என்றும் திட்டமிட்டே செய்ததாகவும் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சத்யாவை கொலை செய்துவிட்டு சதீஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் சதீஷை இன்றும் காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் இது குறித்து மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகள் சத்யா கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்த அவரது தந்தை மாணிக்கம் மாரடைப்பால் காலமானது அவரது குடும்பத்தினர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com