விஜய்யின் தவெக மாநாட்டிற்கு அனுமதி கிடைத்ததா? மாறுபட்ட செய்தியால் தொண்டர்கள் குழப்பம்..!

  • IndiaGlitz, [Sunday,September 08 2024]

தளபதி விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கி விட்டதாக ஒரு செய்தியும், அனுமதி வழங்கப்படவில்லை என்று ஒரு செய்தியும் மாறி மாறி வெளிவந்து கொண்டிருப்பதை அடுத்து தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து முடித்துவிட்டு அதன் பிறகு முழு நேர அரசியலில் குதிக்க இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் கொடி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு தமிழக காவல்துறை இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில் இன்று காலை முதல்வர் சில ஊடகங்களில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த காவல்துறை அனுமதி வழங்கி விட்டதாகவும் திட்டமிட்டபடி செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை என விழுப்புரம் எஸ்பி தகவல் தெரிவித்துள்ளார். மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து நேரில் ஆலோசனை நடத்த தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகு மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த இரு மாறுபட்ட செய்திகளால் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 

More News

பட்டையை கிளப்பும் 'மட்ட' பாடல்.. சமூக வலைத்தள டிரெண்டிங்கில் த்ரிஷா..!

விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற 'மட்ட' பாடல் மிகப்பெரிய ஹிட்

நடிகர் விக்ராந்துக்கு உதவி செய்த விஜய் சேதுபதி.. கலக்கலான போஸ்டர் ரிலீஸ்..!

நடிகர் விக்ராந்த் நடிக்கும் அடுத்த படத்தின் போஸ்டரை விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த கலக்கலான போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அத்தான்.. பீர் அடிப்பிங்களா? கார்த்தி - அரவிந்த் சாமியின் 'மெய்யழகன்' டிரைலர்..!

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடித்த 'மெய்யழகன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி

சீனு ராமசாமியின் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' படத்தின் பாடல்.. தமன்னா என்ன செய்தார் தெரியுமா?

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான 'கோழிப்பண்ணை செல்லத்துரை' என்ற திரைப்படம் வரும் 20ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில்

மார்பக புற்றுநோயோடு மற்றொரு நோய்.. பரிதாபமான நிலையில் பிரபல நடிகை..!

பிரபல நடிகை ஒருவர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கீமோதெரபி காரணமாக பக்க விளைவுகள் ஏற்பட்டு மற்றொரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக