காட்மேன் வெப்சீரீஸ்: காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை
- IndiaGlitz, [Monday,June 01 2020]
இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்த ’காட்மேன்’ வெப்தொடரின் டீசர் சமீபத்தில் வெளியானது. ஜீ5 தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்த வெப்தொடரின் டீசர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வெப்தொடரின் டீசரில் அதிகபட்ச ஆபாச காட்சிகள் இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மற்றும் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இது குறித்து பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சர்சைக்குள்ளான காட்மேன் வெப்தொடரின் இயக்குநர் பாபுயோகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. காட்மேன் வெப்சீரிஸில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக விமர்சித்ததாக கொடுக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காட்மேன் வெப்தொடரில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த வெப்தொடரை இயக்கிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நேரில் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது