நடிகர் கருணாஸ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு: ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,September 20 2018]

காமெடி நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகர் கருணாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே தன்னை பார்த்து பயந்ததாகவும், அவருக்கு கிடைத்த முதல்வர் பதவி என்பது சின்னம்மா போட்ட பிச்சை என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அதேபோல் ஒரு குறிப்பிட்ட போலீஸ் அதிகாரியின் பெயரை கூறி போலீஸ் உடையை கழட்டி வைத்துவிட்டு தன்னுடன் ஒத்தைக்கு ஒத்தை மோத வருமாறு சவால் விட்டார்.

மேலும் தன்னுடைய இனத்தை சேர்ந்தவர்கள் தன்னிடம் சொல்லிவிட்டு கொலை செய்தால் கூட அவர்களை காப்பாற்றுவேன் என்றும், தன்னுடைய சொத்துக்களை விற்றாவது அவர்களுடைய குடும்பத்திற்கு உதவி செய்வேன் என்றும் பேசினார்.

இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் கருணாஸ் பேசியதால் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.