கமல் மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு: போலீசார் அவசர ஆலோசனை

  • IndiaGlitz, [Friday,October 27 2017]

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் கொடுப்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் பதிவு செய்த ஒரு டுவீட், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரந்தார்

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், 'முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்கு போடலாம்' என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், கமல் மீது வழக்கு போடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்

இந்தநிலையில் இன்று காலை கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சட்டநிபுணர்கள் மற்றும் சைபர்கிரைம் போலீசார் ஆலோசனைக்கு பின்னர் கமல்ஹாசன் மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது