'இந்தியன் 2' விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் சாங் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து குறித்து இணை இயக்குனர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை செய்வதற்காக ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த கமலஹாசன், இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்த விபத்தின் போது காயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இருப்பினும் இது ஒரு குற்ற நடவடிக்கை இல்லை என்றும் இது ஒரு அஜாக்கிரதை காரணமாக நடந்த விபத்து என்பதால் விசாரணை மட்டும் செய்யப்படும் என்றும் கைது நடவடிக்கை ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்து நடந்த இடத்தில் நூற்றுக்கணக்கானோர் இருந்துள்ளதால் அனைவரிடமும் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டிருப்பதாகவும் படிப்படியாக இந்த விசாரணை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments