பிக்பாஸ்: கமல்ஹாசனை கைது செய்ய போலீஸ் கமிஷனரிடம் மனு
Send us your feedback to audioarticles@vaarta.com
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி காமெடி, விறுவிறுப்பு, கேலிக்கூத்து, சர்ச்சைகள் ஆகியவைகள் கலந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி இந்திய மக்களின் கலாச்சார பண்பாடுகளை சீரழிப்பதாகவும், எனவே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனையும், இதில் பங்கேற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இந்திய மக்கள் மானவே முக்கியம் எனும் கொள்கைகள் உடையவர்கள், இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் நோக்கில் தொடர்ந்து சினிமா, டிவி நிகழ்ச்சிகள் செயல்பட்டு வருகின்றன.
இதன் உச்சகட்டமாக பிக்பாஸ் எனும் ஆபாச நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் எந்தவித தொடர்பு இல்லாத ஏழு ஆண்கள் ஏழு பெண்கள் கலந்து கொண்டு ஆபாசமாக பேசியும், 75% நிர்வாணமாகவும் நடித்து வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொலைக்காட்சியை பார்த்து வரும் சூழலில் இது போன்ற நிகழ்ச்சிகள் சமூக சீர்கேடுகளை அதிகரிக்க செய்யும்.
தமிழர்கள் உயிரை விட மேலாக மதித்து போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தை கூட கிண்டலடிக்கும் காட்சிகள் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது. இது ஏழு கோடி தமிழர்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனையும், அந்நிகழ்ச்சியில் நடிக்கும் நமிதா, ஓவியா, காயத்ரி ரகுராம், ஜூலி, ஆர்த்தி, ரைசா, கஞ்சாகருப்பு, வையாபுரி, சக்தி, ஆரூள், பரணி, சினேகன், கணேஷ் போன்ற 14 பேர்களையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டை காப்பாற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments