கொலை வழக்கில் சிக்கினாரா தங்கமகன் மாரியப்பன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் மாரியப்பன். இவருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்த நிலையில் தற்போது இவர் மீது கொலை முயற்சி புகார் ஒன்று காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு கீழே விழுந்ததாகவும், அந்த சமயத்தில் அந்த சாலையில் வந்து கொண்டிருந்த மாரியப்பனின் கார் பைக் மீது மோதியதாகவும் தெரிகிறது. இந்த எதிர்பாராத சம்பவத்தில் மாரியப்பனின் கார் சேதம் அடைந்ததாகவும், இதனை தட்டிக்கேட்க மாரியப்பனும் அவருடைய நண்பர்களும் சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று அவரை மிரட்டியதாகவும் அவருடைய செல்போனை பறித்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதன்பின்னர் மறுநாள் சதீஷ்குமார் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் பிணமாக இருந்ததாகவும், சதீஷ்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் கூறியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து மாரியப்பன் கூறியபோது, 'மது போதையில் இருந்த சதீஷ்குமார் தனது புதிய காரில் மோதிவிட்டு, நிற்காமல் சென்று விட்டதாகவும், இதுகுறித்து கேட்கவே அவரது வீட்டிற்கு சென்றதாகவும் கூறினார். மேலும் கார் சேதமான செலவை சதிஷ்குமார் தாய் ஏற்பதாக கூறியும் அதற்கு தான் மறுத்து விட்டதாகவும் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com