உதயநிதி, சந்தானம் நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தவர் நகைச்சுவை நடிகை மதுமிதா. அந்த படத்தில் இவரை சந்தானம் தேனடை என்று கூறியதால் 'தேனடை' மதுமிதா என்றே அழைக்கப்பட்டார்.இந்த நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வரும் மதுமிதாவுக்கும் பக்கத்து வீட்டு பெண் உஷாவுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உஷா சமீபத்தில் காவல்நிலையத்தில் மதுமிதா மீது புகார் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மதுமிதா, உஷாவை தாக்கியதோடு அவருடைய கையை கடித்து குதறியுள்ளார்.இதனால் வலியால் துடித்த உஷா, மீண்டும் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மதுமிதாவும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இருவரது புகார் குறித்தும் வளசரவாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.