கிரேஸி மோகன் காமெடியை ரிப்பீட் செய்த விஜய்சேதுபதி மீது காவல்துறையில் புகார்

  • IndiaGlitz, [Friday,May 08 2020]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது கடவுள் குளிப்பதை காட்டுகிறார்கள், ஆனால் டிரஸ் பண்ணும் போது மட்டும் திரை போட்டு மூடி விடுவார்கள் என்று காமெடியாக பேசினார். இந்த பேச்சு குறித்த வீடியோ ஒரு வருடத்திற்கு பின் தற்போது வைரல் ஆகியுள்ளது. இதனையடுத்து இதுகுறித்து அகில இந்திய இந்துமகா என்ற அமைப்பு காவல் துறையில் புகார் செய்துள்ளது. அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

விஜய் சேதுபதி அவர்கள் இந்து கோயில்களில் தெய்வங்களுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் விதமாக தெய்வங்கள் குளிப்பதை எல்லாருக்கும் காட்ட தெரிந்தவர்களுக்கு ஏன் தெய்வங்கள் உடைமாற்றும் நிகழ்வை காட்டக்கூடாது என்று ஒரு சிறுமி தனது தாத்தாவிடம் கேட்டது போல கற்பனையாக சொல்வது இந்து மதத்தையும் அதன் வழிபாட்டு முறைகளையும் மற்றும் இந்து கோவில்களில் நடக்கும் ஆகமவிதி நடைமுறைகளையும் கேவலப்படுத்தி இந்துக்களின் மனதில் நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளார் 

அந்நிகழ்ச்சியின் நோக்கமே குறைந்த தண்ணீரில் குளிப்பது எப்படி என்று காட்டுவதற்கான நிகழ்ச்சியாக அமையப் பெற்று உள்ளது. அதில் இந்துமத கோவில்களில் அபிஷேக அலங்கார முறைகளைப் பற்றி கூற காரணம் என்ன? இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மதம் தான் கிடைத்ததா? ஆகையால் விஜய் சேதுபதி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

மறைந்த நடிகர் கிரேசி மோகன் அவர்கள் ஒரு பொது விழாவில் இதே கருத்தை காமெடியாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரேசி மோகன் பேசிய பேச்சை விஜய் சேதுபதி ரிப்பீட் செய்ததற்கு போலீஸ் நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

கொரோனா தடுப்பூசி:  இறுதிக்கட்ட சோதனையை நடத்திவரும் நாடுகள்!!! நிலவரம் என்ன???

கொரோனா பரவல் உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தடுப்பூசி பற்றிய ஆராய்ச்சிகள் உலக நாடுகளால் விரைப்படுத்தப் பட்டிருக்கின்றன.

திரைப்படத்துறையினர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியின் போது உரிய சமூக இடைவெளி

நேற்று நிலவு நடத்திய அற்புதமான கண்காட்சி!!!  

இயற்கை சில நேரங்களில் தனது அழக்கை காட்டி மனிதர்களை ஊற்சாகப்படுத்தும். அப்படியொரு நிகழ்வை நேற்று, நிலவு அரங்கேற்றியிருந்தது

சசிகுமாரிடம் பெற்ற கடனை திருப்பி கொடுத்துவிடுவேன்: ஒரு விவசாயியின் தன்னம்பிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

கொரோனா விடுமுறையில் 2 முன்னணி இயக்குனர்களுடன் டிஸ்கஸ் செய்யும் பிசி ஸ்ரீராம்

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கோலிவுட் திரையுலகில் கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு உள்பட எந்த பணியும் நடைபெறவில்லை.