ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியது ஆர்யாவா? காவல்துறை ஆணையர் பேட்டி!

  • IndiaGlitz, [Saturday,September 04 2021]

ஜெர்மனி வாழ் தமிழ் பெண் ஒருவர் தன்னை ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 70 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார். இந்த புகார் நீதிமன்றத்திற்கு சென்றதை அடுத்து ஆர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆர்யா பெயரை பயன்படுத்தி ஜெர்மனி பெண்ணிடம் ஏமாற்றியவர் என இரண்டு நபர்கள் பிடிபட்டார்கள் என்பதும் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆர்யாவிடம் மேலும் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அவர் ஆர்யாவின் வழக்கு குறித்து கூறிய போது ’ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியது நடிகர் ஆர்யா இல்லை என்று தெரிவித்துள்ளார். ஜெர்மனி பெண்ணை ஏமாற்ற பயன்படுத்தப்பட்ட செல்போனை ஆய்வு செய்ததாகவும், அந்த செல்போனை ஆர்யா பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெர்மனி பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்யா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும், முதல் தகவல் அறிக்கையை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆர்யா மீது தவறு இல்லை என்பது தெரிந்தது என்றும் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

எனவே ஆர்யா மீது தவறு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக காவல்துறை ஆணையர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.