'விஸ்வாசம்' அஜித்துக்கு காவல்துறை ஆணையர் பாராட்டு
- IndiaGlitz, [Thursday,January 17 2019]
பொங்கல் விருந்தாக கடந்த 10ஆம் தேதி வெளியான 'விஸ்வாசம்' திரைப்படம் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்து ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தை குடும்பம் குடும்பமாக பார்த்து ரசித்து வருவதாக தமிழகம் முழுவதிலும் இருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த இந்த படத்தை பார்த்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சரவணன் என்பவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அஜித்துக்கும், விஸ்வாசம் குழுவினர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல், நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது .
* படத்தில் கதாநாயகன் , கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது.
* கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது.
* பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.
இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா.
விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள்
இவ்வாறு காவல்துறை ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.