சென்னையில் செயின் திருடனை விரட்டி பிடித்த சிறுவனுக்கு காவல்துறை பாராட்டு

  • IndiaGlitz, [Thursday,April 19 2018]

சென்னை அண்ணாநகரில் பெண் மருத்துவர் ஒருவரிடம் நோயாளி போல் நடித்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த பெண் மருத்துவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு ஓடினார்.

இதனையடுத்து அந்த பெண் மருத்துவர் அலறிய நிலையில் அங்கிருந்த சிறுவன், செயின் திருடனை விரட்டி பிடித்தார். அந்த சிறுவனின் தைரியத்தை அந்த பகுதியில் இருந்த அனைவரும் பாராட்டினர்

இந்த நிலையில் சூர்யா என்ற அந்த சிறுவனை இன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விசுவநாதன் அவர்கள் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார்.