சென்னையில் ஆகஸ்ட் 31 வரை 144 தடை உத்தரவு: காவல்துறை ஆணையர் அறிவிப்பு
- IndiaGlitz, [Saturday,August 01 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆறாம் கட்ட ஊரடங்கு முடிவடைந்து இன்று முதல் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆரம்பமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் இம்மாதம் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் ஒரு சில கூடுதல் தளர்வுகள் இந்த ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் சென்னையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவரகள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சென்னையில் பொதுவெளியில் 5 பேருக்கு மேல் கூட கூடாது என்ற விதி அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே பேரிடர் மேலாண்மை சட்டம் அமலில் உள்ளதால் சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஐந்து பேருக்கு மேல் பொதுவெளியில் கூடக்கூடாது என்ற கட்டுப்பாடு மீண்டும் அமலுக்கு வந்துள்ளதால் சென்னை மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது