'திமிரு பிடிச்சவன்' பாணியில் திருவண்ணாமலையில் செயல்பட்ட போலீசார்

  • IndiaGlitz, [Saturday,November 24 2018]

விஜய் ஆண்டனி நடித்த 'திமிரு பிடிச்சவன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் 'சாலையில் ஓடும் சாக்கடையை போலீஸ் கேரக்டரில் நடித்த விஜய் ஆண்டனி யாரையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய போலீஸ் டீமுடன் சுத்தம் செய்வார். இந்த காட்சியை காணும்போது நிஜ வாழ்க்கையில் இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா? என்று எண்ண தோன்றியது ஆனால் இதுபோன்ற சம்பவம் ஒன்று உண்மையிலேயே நடந்துள்ளது.

ஆம், திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்லான்பிள்ளைபெற்றால் என்ற இடத்தில் சாலையோரம் சேரும் சகதியுமாக இருந்ததை போலீசார் சிலர் பார்த்தனர். உடனே யாரையும் எதிர்பாராமல் அவர்களில் அய்யனார், முருகன் ஆகிய இரண்டு காவலர்கள் உடனே மண்வெட்டி எடுத்து அந்த சேர், சகதிகளை சுத்தம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் ஆபத்து நீங்கியது.

போலீசாரின் இந்த செயல் அந்த பகுதி மக்களை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More News

'ஆயிரத்துள் ஒருவன் 2' எப்போது? செல்வராகவனின் பதில்

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'

ரஜினியின் '2.0' படம் குறித்து சிவகார்த்திகேயன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0; திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் உலகம் முழுவதும் பிரமாண்டமாக நடந்து வருகிறது

ரஜினி, விஜய் நிவாரண உதவி குறித்து கருத்து கூறிய கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

கமல் இன்னும் களத்தூர் கண்ணாம்மா குழந்தையாகவே இருக்கின்றார்: அமைச்சர் ஜெயகுமார்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கிய கமல்ஹாசனுக்கும் ஆளும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருப்பது தெரிந்ததே

டெல்டா விவசாயிகளின் வங்கிக்கடனை ரத்து செய்ய வேண்டும்: பிரபல இயக்குனர் கோரிக்கை

சமீபத்தில் கஜா புயல் டெல்டா மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு சென்ற நிலையில் நிவாரண பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும்