வீர இளைஞருக்கு கொரோனாவை கண்ணில் காட்டிய போலீஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பீதி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவையும் மீறி ஒரு சிலர் சாலைகளில் காரணம் இன்றி சுற்றித் திரிகின்றனர். இவ்வாறு சாலையில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை பெண் போலீசார் கண்டித்த போது அந்த பெண் போலீஸை எதிர்த்து அந்த இளைஞர் வீராவேசமாக போராளி போல் பேசிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
கொரோனா வைரஸ் என்றால் என்ன? அந்த நுண்ணுயிரியை என் கண் முன் காட்டு, சிஎமை வரச் சொல், ஓட்டு கேட்க மட்டும் வர்றாருல்ல என பெண் போலீசாரிடம் அத்துமீறி பேசிய அந்த வாலிபரை காவல்துறையினர் நைஸாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின் அந்த வாலிபரை முட்டி போட வைத்து போலீசார் தங்கள் பாணியில் அவருக்கு நுண்ணுயிரியை காண்பித்தனர்.
‘என் ஊரு, என்னோட கோட்டை, நான் அப்படித்தான் சுற்றுவேன் என்று வீராவேசமாகப் பேசிய இளைஞர் போலீசார் கவனிப்பிற்கு பின் ’இனி வீட்டைவிட்டு வெளியே வர மாட்டேன், இது போல் பேச மாட்டேன் என்று கெஞ்சிய காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னும் பின்னும் மூச்சு வாங்க பெண் போலீசாரிடம் ஆவேசமாக பேசிய அந்த இளைஞரின் அடுத்த சீனில் முட்டி போட வைத்து, முட்டை விட வைத்தார் காவல் ஆசிரியர்.
அரசியல் மேடைகளில் ஆவேசமான பேசும் பேச்சுக்களை யூட்யூபில் கேட்டு அதேபோல் ஆவேசமாக போலீசாரிடம் நேரம் காலம் தெரியாமல் பேசிய அந்த வாலிபர் தற்போது யூடியூபில் ட்ரென்ட் ஆக மாறி உள்ளார். இனிமேலாவது ஆவேசப் பேச்சுக்களை ஒருபோதும் பேசவும் மாட்டார், பார்க்க மாட்டார் என்று நம்புவோம்
சமூக இணையதளங்களில் போலி கணக்கை துவக்கி ஆவேசமாக கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் போலியான போராளிகள் தப்பித்துவிடலாம். ஆனால் உயிரை பணயம் வைத்து பணி செய்து கொண்டிருக்கும் போலீஸாரிடம் நேருக்கு நேராக நின்று அகம்பாவமாக பேசுபவர்கள் தப்பிக்க வாய்ப்பே இல்லை என்பதை உணர்த்தும் இந்த காட்சி, இதுபோன்று பேசுபவர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும்
இந்த சம்பவத்தின் ஹைலைட்டாக போலீசார்களின் நுண்ணுயிர் ஆபரேஷனுக்கு நடுவே தனக்கு முன்பக்கம் ஆபரேசன் செய்துள்ளதால் பின்பக்கம் மட்டும் அடிக்க வேண்டுகோள் விடுத்த அந்த இளைஞரின் நேர்மையும் சமூகவலைதளத்தில் வெகுவாக பாராட்டை பெற்று வருகிறது
மொத்தத்தில் அறந்தாங்கியில் செருப்பெடுக்க வந்ததாக கூறிய இளைஞரை பருப்பெடுத்து அனுப்பியது கடமை தவறாத காவல்துறை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments