மெரீனாவுக்கு செல்லும் பாதைகள் முடக்கம். திருவல்லிக்கேணியில் போலிசார் தடியடி.
- IndiaGlitz, [Monday,January 23 2017]
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும், பீட்டாவைத் தடை செய்யக்கோரியும் கடந்த ஏழு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சென்னை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வெளியேற்றி வருகின்றனர். கடற்கரைக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளையும் போலீசார் முடக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கெடுத்துள்ளவர்கள் முறையாகவும், அமைதியாகவும் தாங்களாகவே கலந்துசெல்ல வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை வேண்டுகோள் விடுத்தனர். ஆனாலும் நிரந்தர சட்டம் மத்திய அரசால் இயற்றப்படும் வரை வெளியேற போராடத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் சிலர் கூறி வருகின்றனர். அவர்களை காவல்துறையினர் வெளியேற்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மெரீனாவுக்கு போகும் அனைத்து பாதைகளையும் போலீஸார் முடக்கிவிட்டதால் திருவல்லிக்கேணி பகுதி வழியாக போராட்டத்தில் கலந்து கொள்ள கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் செல்ல முயன்றதாகவும், அங்குள்ள அசாதாரண நிலை காரணமாக திருவல்லிக்கேணியில் மட்டும் போலீசார் தடியடி நடத்தியதாகவும் தகவல்கள் வந்துள்ளது.