'குக்கூ குக்கூ' பாடலில் கொரோனா விழிப்புணர்வு: காவல்துறையின் வித்தியாசமான முயற்சி
- IndiaGlitz, [Wednesday,April 28 2021]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்ற விழிப்புணர்வுகளை மத்திய-மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் கேரள மாநில போலீசார் வித்தியாசமான முறையில் சந்தோஷ் நாராயணனின் சூப்பர் ஹிட் பாடலான ’குக்கு குக்கூ’ பாடலின் பாணியில் கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த பாடலுக்கு போலீஸ்காரர்கள் மாஸ்க் அணிந்து நடனமாடி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.
அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும், கோவிட் எண்ணிக்கைகள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பது முக்கியம் என்றும், அதேபோல் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து ஒருவரை ஒருவர் டச் செய்யாமல் இருக்கவேண்டும் என்றும் கைகளில் சானினிடைசர் மூலம் அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் இவையெல்லாம் செய்தால் நாம் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் என்றும் அந்த பாடல் வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அனைவரும் கண்டிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் வளமான எதிர்காலத்திற்கு அரசுடன் துணை நில்லுங்கள் என்றும் அந்த பாடல் வரிகளில் குறிப்பிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளா போலீஸ் வழி
— Arjun Saravanan (@ArjunSaravanan5) April 28, 2021
எப்போதும் தனி வழி.
எப்படியாவது விழிப்புணர்வு ஏற்படுத்தினால் சரி #WearAmask #Getvaccinated pic.twitter.com/ZQwFKKDYIS