'காப்பான்' பட நடிகையை பணம் கேட்டு மிரட்டிய நால்வர் கைது!

  • IndiaGlitz, [Wednesday,June 24 2020]

கடந்த ஆண்டு வெளியான சூர்யாவின் 'காப்பான்’ திரைப்படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின் பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இயக்குனர் விஜய் இயக்கி வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற படத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் நடிகை பூர்ணாவை பணம் கேட்டு மிரட்டியதாக நால்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த சரத், அஷ்ரப், ரபீக் மற்றும் ரமேஷ் ஆகிய நால்வரும் பூர்ணாவிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் கொடுக்கவில்லை என்றால் அவரது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்போம் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது

மேலும் பூர்ணாவின் வீட்டின் அருகே வந்து புகைப்படங்களையும் எடுக்க முயற்சித்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து பூர்ணாவின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நால்வரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிரபல நடிகை ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டிய நால்வரால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

More News

நாளை முதல் 30ஆம் தேதி வரை மேலும் ஒரு கட்டுப்பாடு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்தாலும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

தமிழகத்தில் கொரோனாவை ஒழிக்க அஜித் கொடுத்த ஐடியா!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் கூறுவதெல்லாம் பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்,

கொரோனாவுக்கு மத்தியில் இப்படியொரு கொடுமையா??? கலக்கத்தில் மெக்சிகோ!!!

கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் இயற்கை பேரிடர்களும் உலகத்தை அச்சுறுத்தி வருகிறது.

போலி இ-பாஸ் தயாரிப்பு: தலைமைச்செயலக ஊழியர் உள்பட 5 பேர் கைது

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணம் செய்ய

கொரோனாவைக் கட்டுப்படுத்திய ஒரே இந்திய மாநிலம்!!! ஐ.நா. சபை பாராட்டு!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.