நடிகை கெளதமி அளித்த நில மோசடி புகாரில் திடீர் திருப்பம்.. கேரளாவில் அதிரடி நடவடிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களான அழகப்பன், அவரது மனைவி மாச்சியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் சதீஷ்குமார் உட்பட 6 பேரை கேரளாவில் உள்ள திருச்சூரில் வைத்து கைது செய்துள்ளனர்
கடந்த செப்டம்பர் மாதம் நடிகை கௌதமி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நில மோசடி குறித்த புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்பட பல்வேறு இடங்களில் தனக்கு சொந்தமான சொத்துக்களை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்,.
இந்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட அழகப்பன் மற்றும் அவரது மனைவியின் விசாலாட்சி உள்பட 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பல நாட்களாக இவர்கள் தலைமறைவாக இருந்த நிலையில் மூன்றுக்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் இவர்களை தேடி வந்தனர். அதுமட்டுமின்றி அவர்களுடைய வீட்டில் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர்.
இந்த நிலையில் அழகப்பன் தாக்கல் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் கேரள மாநிலம் திருச்சூரில் 6 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இவர்களை அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வர முயற்சி செய்யப்பட்டு வருகிறது. நாளை எழும்பூர் நீதிமன்றத்தில் 6 பேரும் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING || நடிகை கெளதமியின் பரபரப்பு புகார்... மனைவியோடு சிக்கிய முக்கிய புள்ளி - அதிரடி கைது#Gautami | #Police pic.twitter.com/n9DQIbNaKF
— Thanthi TV (@ThanthiTV) December 21, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com