கோழிகளுக்கு கொரோனா??? வதந்தி பரப்பிய ஒருவர் கைது...

பண்ணை கோழிகளுக்கு கொரோனா பரவியதாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பியவர் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார். கொரோனா அச்சத்தால் இறைச்சியின் விற்பனை தமிழகத்தில் கடும் சரிவினைச் சந்தித்து இருக்கிறது. இந்நிலையில் கோழிகளுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பிய ஒருவர் கைது செய்யப் பட்டு உள்ளார்.

பிப்ரவரி மாதம் முதலே நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள பண்ணைக் கோழிகளுக்கு கொரோனா பரவி இருப்பதாக வாட்ஸ்-அப்பில் பல வதந்திகள் உலா வந்து கொண்டிருந்தன. இதையடுத்து சேலம் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் கறிகோழிகளின் விற்பனை கடும் சரிவை சந்தித்தது. எனவே வதந்தி பரப்பி வருவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முட்டை மற்றும் கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் காவல் துறையினரிடம் முறையிட்டது.

இதன் அடிப்படையில் நாமக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரைத் கைது செய்தனர். விசாரணையில் பெரியசாமி அவருடைய வாட்ஸ்-அப் எண்ணிலிருந்து இதுபோன்ற வதந்திகளை பரப்பியது தெரிய வந்திருக்கிறது.

இதற்கு முன்னதாக கோழிக்கறி மற்றும் இறைச்சி சாப்பிட்டால் கொரோனா பரவும் என்ற வதந்தி ஆந்திராவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது. விற்பனை சரிவினை சமன்படுத்த கடைக்காரர்கள் பல சலுகைகளையும் அறிவித்தனர். ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் ஒரு கடைக்காரர் 5 கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் ஒரு ஹெல்மெட் இலவசமாக வழங்கினார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

More News

பிரபல நடிகரின் படத்தில் இணைந்த சின்னிஜெயந்த்!

கடந்த 1984ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பாலுமகேந்திரா இயக்கிய 'கை கொடுக்கும் கை' என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் சின்னிஜெயந்த்,

ரஜினிகாந்த் கட்சி அறிவிப்பு நாளை வெளியாகிறதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அரசியலில் இறங்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின்னர்

'துப்பறிவாளன் 2': மிஷ்கின் நிபந்தனைகளுக்கு விஷால் பதில்

'துப்பறிவாளன் 2' படப்பிரச்சனையில் மிஷ்கின் தயாரிப்பாளருக்கு விதித்த ஒருசில நிபந்தனைகள் குறித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். தற்போது இயக்குனர் மிஷ்கினுக்கு நடிகரும்

'துப்பறிவாளன் 2': விஷாலுக்கு மிஷ்கினின் நிபந்தனைகள்!

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வந்த 'துப்பறிவாளன் 2' படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் திடீரென இயக்குனர் மிஷ்கினுக்கும் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ விஷாலுக்கும்

கொரோனாவால் பலியான முதல் இந்தியர்: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் சமீபத்தில் இந்தியாவிற்குள் நுழைந்தது என்பது தெரிந்ததே.