குளிர்பானத்தில் மதுகலந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த மூவர் கைது
Send us your feedback to audioarticles@vaarta.com
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவனால் கைவிடப்பட்டு பெற்றோருடன் தங்கியிருந்த நிலையில் அந்த பெண்ணுக்கு நைவின்மாலிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாகவும், நைவின்மாலிக் திருமணம் செய்து கொள்வதாக கூறியதை அந்த பெண் நம்பியதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து காதலர்களாக மாறி பல இடங்களில் சுற்றிய இருவரும் சமீபத்தில் ஏற்காடு சென்று அங்குள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர். அந்த விடுதியில் குளிர்பானத்துடன் மதுகலந்து அந்த இளம்பெண்ணுக்கு கொடுத்த நைவின்மாலிக், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தனது நண்பர்களை நைவின்மாலிக் வரவழைத்ததாகவும், அவர்களும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், அதுமட்டுமின்றி தாங்கள் கூப்பிடும் நேரமெல்லாம் தங்களுடன் வரவேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். தனக்கு நடந்த கொடுமையை அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறி அவர்களுடைய உதவியுடன் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து நைவின்மாலிக் உள்பட மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com