'அர்ஜூன் ரெட்டி' பட நடிகை கொடுத்த பாலியல் புகார்: 'போக்கிரி' பட ஒளிப்பதிவாளர் கைது!
Send us your feedback to audioarticles@vaarta.com
’அர்ஜூன் ரெட்டி’படத்தில் நடித்த நடிகை ஒருவரை திருமணம் செய்வதாக ஏமாற்றி அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு அதன் பின்னர் அவரை ஏமாற்றியதாக ’போக்கிரி’ பட ஒளிப்பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மகேஷ்பாபு நடித்த ’போக்கிரி’, பிசினஸ்மேன்’ உள்பட பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ஷ்யாம் கே. நாயுடு என்பவர் அர்ஜுன் ரெட்டி படத்தில் துணை நடிகையாக நடித்த சாய் சுதா என்பவரை காதலித்ததாகவும் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு தன்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும், தன்னை நம்ப வைத்து ஏமாற்றிய ஷ்யாம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஷ்யாமை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் திடீரென நடிகை சாய் சுதாவும் தானும் சமாதானம் ஆகிவிட்டோம் என்றும், சமாதானம் ஆன கடிதம் ஒன்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ஷ்யாம், ஜாமீன் பெற்றுவிட்டார்
இந்த நிலையில் நடிகை சாய் சுதா, மீண்டும் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில் தான் ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே நாயுடுவுடன் எந்தவித சமாதானத்திலும் ஈடுபடவில்லை என்றும் தன்னுடைய கையெழுத்தை போலியாக பயன்படுத்தி ஷ்யாம் கே.நாயுடு ஜாமீன் பெற்று உள்ளதாகும் எனவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் புதிய மனுவில் குறிப்பிட்டிருந்தார்
இந்த மனுவின் அடிப்படையில் போலி கையெழுத்து போட்டு ஜாமீன் பெற்றதாக மீண்டும் கைது செய்யப்பட்ட ஷ்யாம் கே. நாயுடு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது நடிகையை ஏமாற்றிய வழக்கு மற்றும் போலி கையெழுத்து போட்ட வழக்கு என 2 வழக்குகளில் அவர் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com