போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை: தலைவர்கள் கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்றிரவு சோதனை நடத்தியது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுக தொண்டர்கள் சோதனை நடந்தபோது வேதா இல்லம் முன் குவிந்து 'மோடி ஒழிக, மத்திய அரசு ஒழிக, வருமான வரித்துறையினர் ஒழிக என்று கோஷம் போட்டனர். இந்த நிலையில் இந்த சோதனை குறித்து தலைவர்களின் ரியாக்சன் என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்
டிடிவி தினகரன்: போயஸ் இல்லத்தில் நடைபெறும் சோதனை ஜெயலலிதாவுக்கு செய்யப்படும் துரோகம். சோதனையின் பின்னணியில் முதலமைச்சர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் உள்ளனர். ஜெயலலிதா வாழ்ந்த் வீடு எங்களுக்கு கோவில், அவர் தங்கியிருந்த அறை கருவறை. போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்றுவோம் என்று சொல்லி தொண்டர்களையும் மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வரும் எடப்பாடியின் துரோக அரசு, இந்த துரோக செயலுக்கு என்ன பதில் சொல்ல போகிறது? அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அவர்கள் இருவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
வி.பி.கலைராஜன்: போயஸ் கார்டனில் நடந்த வருமான வரி சோதனைக்கு மாநில அரசே முழுக்காரணம். சோதனையைக் கண்டு அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டார்கள் கொதித்து போயுள்ளனர்
தீபா: போயஸ் கார்டன் வீட்டில் சோதனை செய்ய என்னிடம் அனுமதி பெறாதது ஏன்? என் சகோதரர் தீபக்கிடமும் ரெய்டு குறித்து எந்த அனுமதியும் அதிகாரிகள் பெறவில்லை. ரெய்டு குறித்து செய்தியைப் பார்த்துதான் இங்கே வந்துள்ளேன். போயஸ் இல்லம் குறித்து நான் வழக்கு தொடர்ந்துள்ளதால், எனக்கு ரெய்டு குறித்து தெரியபடுத்தியிருக்க வேண்டும். ரெய்டுக்கு யார் பொறுப்பு என்றெல்லாம் எனக்குத் தெரியாது. வேதா இல்லம் மற்றும் பூர்வீக சொத்து எங்களுக்குச் சொந்தமானது. அதை மீட்பது எனது கடமை. ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகத்தான் தெரிகிறது'
மைத்ரேயன் எம்பி: காரணம் என்னவாக இருந்தாலும் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தில் சோதனை என்பது வேதனை அளிக்கிறது; என்னை பொறுத்தவரை ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் ஒரு கோயில்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout