இந்த விலைக்கு.. இவ்வளவு specification.. அதிரடியாக களமிறங்கிய போக்கோ எக்ஸ் 2..!

  • IndiaGlitz, [Tuesday,March 10 2020]

பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட போகோ எக்ஸ் 2-வானது இன்று விற்பனைக்காக வெளியாகியுள்ளது. மார்ச்-3 ம் தேதி விற்பனைக்கு பின் இன்றுள்ள விற்பனையிலும் இது சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6ஜிபி+64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.15,999 எனவும், 6ஜிபி + 128ஜிபி வேரியண்ட் ரூ.16,999 எனவும், டாப் என்ட் வேரியன்ட்டானது 8ஜிபி+256ஜிபி ரூ.19,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டள்ளது. 20 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கும் மொபைல்களில் இது சிறந்ததாக இருக்கும் என விமர்சகர்களால் கூறப்பட்டுள்ளது. சிகப்பு, நீலம் மற்றும் பர்பிள் நிறங்களில் இந்த மொபைலானது கிடைக்கிறது.

1080 X 2400 பிக்சல்கள் கொண்ட ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்பிளே கொண்டுள்ள இந்த மொபைலானது 20 ஆயிரத்திற்கு குறைவாக கிடைக்கும் மொபைல்களில் 120hz refresh rate கொண்டுள்ள ஒரே மொபைலாக உள்ளது. ஆன்டிராய்டு 10 இயங்குதளம் கொண்டுள்ளது. மற்றும் எல்லா போக்கோ மொபைல்களில் உள்ள MIUI 11 மென்பொருளும் இங்குள்ளது. 27W சார்ஜருடன் 4500 எம்.ஏ. எச் பேட்டரியை கொண்டுள்ளது.