ஸ்டிக்கர் ஒட்டிய அன்புமணி ராமதாஸ் கைது
Wednesday, March 1, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தமிழக அரசு இன்னும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ஒருசில டாஸ்மாக் கடைகளை அகற்றவில்லை. இந்நிலையில் நெடுஞ்சாலைகள் இருக்கும் டாஸ்மாக் கடைகளின் பெயர்ப்பலகைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் தமிழகம் முழுவதும் இன்று பாமகவினர் சார்பில் நடைபெற்றது.
சென்னையில் நடந்த இந்த போராட்டத்தில் பாமக இளைஞரணி தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளின் பெயர்ப்பலகையில் ஸ்டிக்கரை ஒட்டிய அன்புமணியை போலீசார் கைது செய்தனர். அவருடன் பாமக முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பாமகவினர் டாஸ்மாக் கடைகளின் பெயர்ப்பலகைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments