விஷாலின் அடுத்த படத்திற்கு புரமோஷனை தொடங்கிய அரசியல்வாதி
- IndiaGlitz, [Tuesday,November 20 2018]
கோலிவுட் திரையுலகினர் தற்போது ஒரு படத்தின் புரமோஷனுக்கு அரசியல்வாதிகளையே பெரிதும் நம்பியுள்ளனர். வெற்றி பெற வேண்டிய படங்களான 'மெர்சல்', 'சர்கார்' ஆகிய படங்களை சூப்பர் வெற்றி பெற வைத்த பெருமை தமிழக அரசியல்வாதிகளையே சேர்ந்துள்ளது என்பதால் தற்போது நடிகர்கள் உரிமையாக எங்கள் படத்திற்கும் விமர்சனம் செய்து புரமோஷன் செய்யுங்கள் என வெளிப்படையாகவே கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று விஷால் நடித்த 'அயோக்யா' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ள நிலையில் இன்று ஒரு அரசியல்வாதி அந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து புரமோஷனை தொடங்கியுள்ளார். அவர்தான் பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் அவர்கள். அவர்தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன் என்று டாக்டர் ராமதாஸ் அவர்கள் கூறியுள்ளார்.
அயோக்யா' படத்திற்கு அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கிவிட்டதை அடுத்து இந்த படமும் சூப்பர் ஹிட் ஆகும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்!
— Dr S RAMADOSS (@drramadoss) November 20, 2018