காலா படத்திற்காக ஜோராக கைதட்டிய பாமக ராம்தாஸ்
- IndiaGlitz, [Monday,June 04 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன. பல திரையரங்குகளில் முன்பதிவு ஆரம்பித்த ஒருசில நிமிடங்களில் டிக்கெட்டுக்கள் விற்பனை முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் 'காலா' டிக்கெட் விற்பனை குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ஜோரா கைத்தட்டுங்க! காலா திரைப்படத்திற்கு முன்பதிவு தொடங்கியது. வழக்கமான அதிகபட்சக் கட்டணம் ரூ.165.78க்கு பதிலாக ரூ.207.24க்கு விற்கப்படுகிறதாம். இதில் கொடுமை என்னவென்றால் காலா திரைப்படத்தில் ஏழைப் பங்காளனாக நடிக்கிறாராம் ரஜினிகாந்த். ஏழைப் பங்காளன்... ஏழைப் பங்காளன் என்று பதிவு செய்துள்ளார்.
'காலா' படம் மட்டுமின்றி இதற்கு முன்னர் வெளியான பல படங்களுக்கு இதே விலையில் தான் டிக்கெட்டுக்கள் விற்பனையாகி கொண்டிருந்தது என்றும் அப்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காத ராமதாஸ் அவரகள் ரஜினியின் படம் வெளியாகும்போது மட்டும் டிக்கெட் விலையை குறிப்பிடுவது ஏன்? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.