கந்துவட்டி தற்கொலை இரண்டு நாள் செய்தி மட்டுமே: டாக்டர் ராம்தாஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
கந்துவட்டி கொடுமையால் இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் காரணமாக இன்று ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே கந்துவட்டிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.
கந்துவட்டி கொடுமைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்கொலைக்கு தூண்டியவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன
இந்த நிலையில் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் இந்த கந்துவட்டி மரணம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: கந்து வட்டி மிரட்டலால் திரைப்படத் தயாரிப்பாளர் தற்கொலை: செய்தி- ஆழ்ந்த அனுதாபங்கள். 2 நாள் செய்தி தவிர வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது பினாமி அரசு? என்று கூறியுள்ளார்.
நெல்லையில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது கந்துவட்டியால் மேலும் ஒரு மரணம் நிகழ்ந்திருப்பதால் உடனடியாக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout