ஆன்மீக அரசியலை ஆக்ஸ்போர்ட் அறிஞர்களால் தான் விளக்க முடியும்: ராமதாஸ்

  • IndiaGlitz, [Thursday,January 04 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை எந்த அரசியல்வாதியும் பயன்படுத்தாத வார்த்தைகளான 'ஆன்மீக அரசியல்' என்ற வார்த்தையை பயன்படுத்தி அரசியலுக்குள் நுழைந்துள்ளார். இந்த ஆன்மீக அரசியல் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் இன்று லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற கோரி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பாமக தலைவர் ராம்தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை. இந்திய குடிமகன்கள் இரண்டு பேர் சேர்ந்து ஒரு கட்சியை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தால் ஆரம்பிக்கலாம் என்று கூறினார். இந்த இடத்தில் அவர் இரண்டு குடிமகன்கள் என்று கூறியது கமல், ரஜினி ஆகிய இருவரையும் என்று கருதப்படுகிறது.

ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்த கேள்விக்கு கருத்து தெரிவித்த ராமதாஸ், 'இந்த கேள்வியை என்னிடம் கேட்பதைவிட தமிழ்நாட்டில் அரசியல் விஞ்ஞானிகள் அதிகம் உள்ளனர். அவர்களிடம் கேட்கலாம். அந்த அரசியல் விஞ்ஞானிகள் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட் போன்ற பல்கலையில் படித்துவிட்டு வந்திருப்பார்கள். அவர்களிடம் ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்று நீங்கள் கேட்டால் சரியான விளக்கத்தை அளிப்பார்கள்' என்று கூறினார்.

More News

தமிழர் பிரதமரானால் இந்தி பேசியே ஆகவேண்டுமா? சுஷ்மாவிடம் சசிதரூர் வாக்குவாதம்

இந்தியை எதிர்க்கும் தமிழகத்தில் இருந்து எதிர்காலத்தில் பிரதமர் அல்லது வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டால் அவர் இந்தி மொழியை பேசியே ஆகவேண்டும்

ஆயிரம் படங்களுக்கு இசையமைக்க விரும்புகிறேன்: டி.இமான்

நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும்

விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றியா? கமலுக்கு தினகரன் கண்டனம்:

விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி என்று கூறிய கமல்ஹாசனுக்கு ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெயம் ரவி, நிவேதா பேதுராஜ் நடிப்பில் சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ள டிக் டிக் டிக்' திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று சிறப்பாக நடந்தது.

இதுதான் உண்மையிலேயே கீழ்த்தரமான அரசியல்: விஜய்சேதுபதி

கடந்த 2 ஆண்டுகளாக அதிக படங்களில் நடித்து வெற்றி வாகை சூடி வரும் விஜய்சேதுபதிக்கு இந்த ஆண்டு குறைந்தது பத்து படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. அவற்றில் ஒன்றுதான் சூப்பர் டீலக்ஸ்'