கமல் கட்சியில் இணைந்த பாமகவின் முக்கிய பிரமுகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக ஆட்சி மீதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும், அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய பாட்டாளி மக்கள் கட்சி திடீரென கடந்த வாரம் அதிமுக கூட்டணியில் இணைந்து 7 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதிகளை பெற்றது. மேலும் பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி 21 சட்டசபை இடைத்தேர்தலிலும் அதிமுக ஆதரவு என்றும் அக்கட்சி அறிவித்தது.
இதனால் பாமகவில் உள்ள ஒருசிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டு தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளராக இருந்த ராஜேஷ்வரி, தற்போது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். பாமகவில் இருந்து விலகுவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு ராஜேஷ்வரி அறிவித்தபோது அவருக்கு கமல் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout