ரயில் மீதேறி போராட்டம் செய்த பாமக தொண்டருக்கு நேர்ந்த பரிதாபம்
- IndiaGlitz, [Wednesday,April 11 2018]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தால் சிலசமயம் அசம்பாவிதமும் நடந்து வரும் நிலையில் இன்று ரயில் மீதேறி போராட்டம் நடத்திய பாமக தொண்டர் ஒருவரை உயரழுத்த மின்சாரம் தாக்கியதால் அவர் பரிதாபமாக பலியானார். அடைந்தார். இதனால் போராட்டக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
இன்று புதுச்சேரியில் காவிரி பிரச்சனைக்காக பாமக சார்பில் முழு அடைப்பு நடந்து வருகிறது. இதனால் புதுச்சேரி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டும் பேருந்துகள் நிறுத்தப்பட்டும் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்திலும் பாமகவினர் பல இடங்களில் ரயில் மறியல் செய்தனர். திருச்சியில் நடைபெற்ற ரயில்மறியலின்போது பாமக தொண்டர்கள் ரயிலின் கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாரத வகையில் ஒரு தொண்டர் மீது உயரழுத்த மின்கம்பி உராய்ந்ததால் அவர் தூக்கியடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து அவரது உடலை கைபற்றிய போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.