பாமக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் 7 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை பெற்ற பாமக, முதல்கட்டமாக ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சென்னை தொழிலதிபர் முனைவர் சாம்பால் ஆகியோர்கள் உள்பட 5 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாமக போட்டியிடும் ஐந்து தொகுதி முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்:

1. தருமபுரி: அன்புமணி ராமதாஸ்

2. விழுப்புரம்: வடிவேல் ராவணன்

3. கடலூர்: இரா.கோவிந்தசாமி

4. அரக்கோணம்: ஏ.கே.மூர்த்தி

5. மத்திய சென்னை: முனைவர் சாம் பால்

இந்த நிலையில் பாமக போட்டியிடும் ஏழு தொகுதிகளில் விழுப்புரம் தவிர ஏனைய ஆறு தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பதும் விழுப்புரம் தொகுதியில் விசிக வேட்பாளர் போட்டியிட்டாலும் அவர் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுவதால் பாமகவின் ஏழு தொகுதிகளிலும் திமுக நேரடியாக மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

அதிமுகவின் தலையெழுத்தை நிர்ணயிகும் 18 தொகுதி வேட்பாளர்கள்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறும்

அதிமுக வேட்பாளர் பட்டியல்: 4 வாரிசு வேட்பாளர்கள் போட்டி!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் பிரித்து கொடுத்தது போக, மீதியுள்ள 20 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக,

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

மூன்று முறை கோவா மாநிலத்தின் முதலமைச்சராகவும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த மனோகர் பாரிக்கர்  கடந்த சில மாதங்களாக கணைய புற்று நோயால்

திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு! தூத்துகுடியில் கனிமொழி

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதிகளை நேற்று அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் திமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதன் விபரம் பின்வருமாறு:

அதிமுக, திமுகவுக்கு மாற்று அணி: டி.ராஜேந்தர் அறிவிப்பு

தேர்தல் நேரம் என்றாலே லட்டர்பேட் கட்சிகள் கூட சுறுசுறுப்பாக இயங்கி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று அதிமுக கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு,