விஜய்சேதுபதிக்கு பிரபல அரசியல் கட்சி தலைவர் பாராட்டு

  • IndiaGlitz, [Friday,November 10 2017]

நடிகர் விஜய்சேதுபதி தனியார் சேமியா நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த ரூ.50 லட்சத்தை அப்படியே கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக விளங்கி வரும் அரியலூர் மாவட்டத்திற்கு நன்கொடை அளித்தார் என்று வெளியான செய்தியை காலையில் பார்த்தோம்.

இந்த பணம் அங்கன்வாடி, பார்வையற்ற பள்ளி, செவித்திறன் குறைபாடுள்ள பள்ளி ஆகியவற்றில் படித்துவரும் மாணவர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டவுள்ளது. விஜய்சேதுபதியின் நல்ல உள்ளத்தை திரையுலகினர் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் குறிப்பாக அரியலூர் பகுதி மக்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து டாக்டர் ராம்தாஸ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: விளம்பரத்தில் நடித்ததற்காக கிடைத்த ரூ.50 லட்சத்தை அரியலூர் மாவட்ட அங்கன்வாடிகளின் மேம்பாட்டுக்கு விஜய்சேதுபதி வழங்கியது பாராட்டத்தக்கது. நல்ல வழிகாட்டல், நற்பணி தொடரட்டும்! என்று கூறியுள்ளார்.